அரசு உயர்நிலைப்பள்ளி,வெய்யலூர். பத்தாம் வகுப்பு: 2017-2018-ல் 91% தேர்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
SCHOOL STAFFS

Wednesday, 19 October 2016

டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி முடிவுகள்

டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி 15.10.2016 அன்று  நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

     பேச்சுப்போட்டி
உயர்நிலை (9-10)
இடைநிலை(6-8)
முதல் இடம்         : ச.மகாலெஷ்மி – X
இரண்டாம் இடம்: வீ.சிவரஞ்சனி - IX
மூன்றாம் இடம்   : வீ.கனிமொழி – X
மூன்றாம் இடம்   : வீ.ரம்யா - X
முதல் இடம்         : ச.ஹரிணி – VII E/M
இரண்டாம் இடம்: ர.அபிநயா - VII E/M
மூன்றாம் இடம்   : தி.கார்த்திகா - VII T/M

 கட்டுரைப்போட்டி
உயர்நிலை (9-10)
இடைநிலை(6-8)
முதல் இடம்      : வீ.ரம்யா - X
இரண்டாம் இடம்: வீ.வித்யா - X
மூன்றாம் இடம்   : ச.மகாலெஷ்மி – X
முதல் இடம்      : ச.ஹரிணி – VII E/M
இரண்டாம் இடம்: ர.அபிநயா - VII E/M
மூன்றாம் இடம்   : ர.ஹரிணி – VII E/M
                             ஓவியப்போட்டி
உயர்நிலை (9-10)
இடைநிலை(6-8)
முதல் இடம்         : இ.ஆகாஷ் – IX
இரண்டாம் இடம்: ஜெ.தனேஷ்குமார் – IX
மூன்றாம் இடம்   : இ.அன்புராஜ் – IX
முதல் இடம்         : வீ.வசந்தராஜா - VII E/M
இரண்டாம் இடம்: செ.கோகுல்ராஜ் - VI E/M
மூன்றாம் இடம்    : செ.தமிழரசன் - VI E/M

SMC PRESIDENT

SMC PRESIDENT
Thirumathi. P.AMBUJAVALLI. (AVL)


பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று(19.10.2016) நடைபெற்றது.

                பொறுப்பு தலைமையாசிரியர் திரு.M.அம்பேத்கார் அவர்கள்.                                 பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு A.ராமதாஸ் அவர்கள்,
                    அறிவியல் ஆசிரியர் திரு.V.Tமலர்மன்னன் அவர்கள்
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் 


 19.10.2016 இன்று  பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலாண்டுப்பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் பற்றி யும், மாணவர்களை எவ்வாறு அதிக மதிப்பெண்கள் பெறவைப்பது என்பதைப்பற்றியும், கலந்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

Monday, 17 October 2016

NABARD திட்டத்தின் கீழ் ருபாய் 1.61 கோடியில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம்

வெய்யலூர்,அரசு உயர்நிலைப்பள்ளியில்  NABARD திட்டத்தின் கீழ் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ருபாய் 1.61 கோடியில் கட்டப்பட உள்ளது. துவக்க பணியாக பூமி பூஜை போடப்பட்டது. உடன்  பள்ளியின் PTA  தலைவர் A.ராமதாஸ் அவர்கள், தலைமையாசிரியர்(பொ)  மு.அம்பேத்கார் அவர்கள், அறிவியல் ஆசிரியர் V.T.மலர் மன்னன் அவர்கள். 

SAVE WATER SAVE LIFE” என்ற தலைப்பில் ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

அரசு உயர்நிலைப்பள்ளி வெய்யலூர்
மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் “SAVE WATER SAVE LIFEஎன்ற தலைப்பில்  ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம்

                உயர்நிலை (9-10)

முதல் இடம்          :  தி.சுபாஷ் - X
இரண்டாம் இடம் :  இ.அன்புராஜ்  - IX
மூன்றாம் இடம்    :  ஆ.அஜய் – IX
                      இடைநிலை(6-8)
முதல் இடம்         :  வீ.வசந்தகுமார் VII E/M
இரண்டாம் இடம்:  இ.தீபா – VII E/M
மூன்றாம் இடம்   :  ர.ஆகாஷ் - VIII

Saturday, 15 October 2016

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!
"என் பையன் நல்லா படிக்கிறான்படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான்ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.

குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடுநாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்துஅதிகநேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள்,இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால்முதலில் fine Motor skill என்ற கைகளின்தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்கவேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும்சைனா களிமண்ணை வாங்கி தந்துபிசைந்து விளையாட வைப்பதும்சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள்தசைகள்கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன்குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதாசோளமாவுகோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோவரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

3. சில்லறை காசுகளை எண்ணிஅவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும்பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.

4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால்பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.

5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..

6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள்போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.

7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ்அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடுகாகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம்தீட்டச் சொல்லுங்கள்.

இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது!!

PTA PRESIDENT

                                                                     PTA PRESIDENT
                                                               Thiru. A.RAMADOSS Avl

டாக்டர்.APJ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள்: பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி
டாக்டர்.APJ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று  பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

Thursday, 13 October 2016

'சென்டம்' தேர்ச்சி அளித்த ஆசிரியர்களை கவுரவிக்க வெள்ளி நாணயம்

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 2004ம் ஆண்டு முதல் பல்வேறு ஊக்கப்பரிசு திட்டங்களை பள்ளி கல்வித் துறை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கினை எட்டிய நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கும், 90 சதவீதம் தேர்ச்சிஅளித்த கிராமப்புற பள்ளிகளுக்கும், ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப் படுகிறது.அத்துடன், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.இத்திட்டம், 2011ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டது.தங்கள் பாடத்தில் நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் மத்தியில் இது பெரும் குறையாக இருந்து வந்தது.பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் குமார் மேற்கொண்ட முயற்சி காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி அளித்த 3,935 ஆசிரியர்கள், சில மாதங்களுக்கு முன் கவுரவிக்கப் பட்டனர்.ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தங்கள் பாடத்தில் 'சென்டம்' தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படாமல் இருந்தனர்.தற்போது, கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக சென்டம் தேர்ச்சி கொடுத்த, அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 775 ஆசிரியர்களைகவுரப்படுத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.கடந்த காலங்களில் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் விதமாக, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது, ஆசிரியர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.அதையடுத்து, தற்போது கவுரவிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பரிசாக, 92 சதவீத துாய்மை கொண்ட வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி நாணயங்களை தயாரித்து வழங்க, பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி உள்ளது. நவம்பர் 3ம் தேதி, டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

SSA TRAINING TOPICS (Oct & Nov) WITH THE DETAILS

*22-10-16 CRC for Primary & Upper Primary
TOPIC: கையெழுத்து மற்றும் ஓவியத்திறனை மேம்படுத்துதல்.
*24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only
TOPIC.: தமிழ் இலக்கணம் கற்பித்தல்
*05-11-16-- Primary CRC
TOPIC: பொம்மலாட்டம் வழியாக கதை கூறுதல்
*07-11-16 & 08-11-16 2days BRC level Science Training for Primary Teachers only
TOPIC : உள்ளூர் சுற்றுச் சூழல் வளங்களைப் பயன்படுத்தி அறிவியல் கற்பித்தல்
*12-11-16 -- CRC for Upper Primary
TOPIC : போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்தல்

RTI -சனிக்கிழமை பள்ளி செயல்படும்போது முழுநேரம் செயல்பட வேண்டுமா?

சனிக்கிழமைகளில் பள்ளி முழு நேரம் செயல்பட வேண்டுமா என்ற RTI க்கு மாவட்ட கல்வி அதிகாரி அளித்துள்ள பதில்

Wednesday, 12 October 2016

SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமானச் சான்று தொகை கணக்கிடும் போது DA  மற்றும் HRA கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான செயல்முறை கடிதம்

SCHOOL ACTIVITIES